பக்க முறிவு ஏற்பட்டதால் சாம்பியன்ஸ் தொடரில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது.

ஓவல் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சின் போது பக்க முறிவு ஏற்பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறினார் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ். காயம் சரியாக பல நாட்கள் வேண்டும் என்பதால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அந்த போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசிய அவர், மூன்றாவது ஓவர் முடிவில் உடை மாற்றும் அறைக்கு சென்றார்.

2 ஓவர்கள் வீசிய கிறிஸ் வோக்ஸ் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்நிலையில் அவர் வெளிய செல்ல, இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால், ஜேக் பாலை பயன்படுத்தினார்.

அணியில் ரஷீத் கான் இல்லாததால், பகுதி நேரம் பந்துவீச்சாளராக ஜோ ரூட்டை பயன் படுத்தினார் கேப்டன் இயான் மோர்கன்.

டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்த இங்கிலாந்து அணி, முதலில் வங்கதேச அணி பேட்ஸ்மேனுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் சில மெய்டன் ஓவர்களை வீசினர். சிறிது நேரம் பந்துகளை சரியாக பார்க்க தொடங்கிய, வங்கதேச வீரர்கள், பிறகு அடிக்க தொடங்கினர்.

11வது ஓவரில் வங்கதேச வீரர்கள் 16 ரன் அடிக்க, தொடக்க ஜோடியான தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஜோடி 50 ரன்னை கடந்தது.

ஆனால் அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் சவுமியா பெவிலியன் திருப்பினார். அடுத்த 7 ஓவர்களில் 100 ரன்னுக்குள் இம்ருல் கெய்ஸை வங்கதேசம் இழந்தது. அதன் பிறகு இக்பால்-ரஹீம் ஜோடி சிறப்பாக விளையாட, இக்பால் சதம் அடித்தார்.

306 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. சதம் அடித்த ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.