கிரிக்கெட் என்பது பண்புள்ளவர்கள் விளையாடும் விளையாட்டு என்பது நம் அனைவர்க்கும் தெரியும். இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையிலேயான பயிற்சி போட்டியில் மீண்டு அது நடந்தது. சேஸிங்கில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தபோது இந்த சம்பவம் நடந்தது.
26வது ஓவரில், சவுதி வீசப்பட்ட பந்தை நகர்ந்து வந்து லெக் சைடு அடிக்க நினைத்தார். ஆனால், பந்தின் மேல் பேட் படாததால், கால் மேல் பட்டு சென்றது. இதனால், எல்.பி.டபுள்யூ என கத்தினார் சவூதி. பந்து பின்புறம் சென்றதால், தோனி மற்றும் கோலி ரன் ஓட முடிவு செய்தனர். முதல் ரன்னை ஓட நினைத்த தோனி, சவுதியின் மேல் மோதினார், ஆனால் முதல் ரன்னை முடிவு செய்தார். முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தோனி மற்றும் சவுதிக்கு அடி எதுவும் படவில்லை, இதனால் இருவரும் சிரித்து கொண்டே சென்றனர். அந்த வீடியோவை இங்கே பாருங்கள்: