தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இதில், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் விளையாடுகிறது.
இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின, இந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், இக்பால் மற்றும் சவுமியா இருவரும் பொறுமையாக விளையாடி வந்தனர். முதலில் சவுமியாவின் விக்கெட் இழக்க, அடுத்து இம்ருல் கெய்ஸின் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு இக்பாலுடன் ஜோடி சேர்ந்த ரஹீம், சிறப்பாக விளையாடினார்கள். இக்பால் சதம் அடிக்க, இருவரும் ஜோடி சேர்ந்து, இங்கிலாந்து அணிக்கு 306 ரன் இலக்காக தந்தனர்.
306 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே ஜேசன் ராயை இழந்தது. ஆனால், அதன் பிறகு வந்த ஜோ ரூட், ஹேல்சுடன் ஜோடி சேர்ந்து வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். ஹேல்ஸ் 95 ரன்னில் அவுட் ஆக, கேப்டன் மோர்கன் பொறுப்பை எடுத்து கொண்டு, அற்புதமாக விளையாடினார். இங்கிலாந்தின் ஜோ ரூட் சதம் அடிக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது லண்டனில் இருக்கிறார். இதனால், இந்த போட்டியை பார்த்த அவர், இங்கிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.