சாம்பியன்ஸ் டிராபி: வோக்ஸ்க்கு பதிலாக இங்கிலாந்து அணியில் ஸ்டீவன் பின்ன்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஸ்டீவன் பின்னை அணியில் சேர்த்துள்ளனர்.

பின்னின் கடைசி நான்கு வருட கிரிக்கெட் பயணம் பாதரசம் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரம் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்க வில்லை. தற்போது, வோக்ஸின் காயத்தால், ஸ்டீவன் பின்ன் உள்ளே நுழைந்தார்.

69 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள்ள 102 விக்கெட் எடுத்த ஸ்டீவன் பின்ன், 2012-இல் உலகின் 2வது தலைசிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அடுத்த போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து மோதுகிறது. அந்த போட்டியில் பின்ன் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது. அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அடில் ரஷீத் விளையாடவில்லை, இதனால் டேவிட் வில்லே விளையாடினார். யார் விளையாடினாலும், விளையாடவில்லை என்றாலும், கிறிஸ் வோக்ஸை கண்டிப்பாக இங்கிலாந்து அணி இழக்கும்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.