பதவியில் இருந்து விலகிய பிராண்டன் மெக்கல்லம்.. புதிய பயிற்சியாளரை நியமித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் மகாராஷ்டிரா அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக திகழ்ந்த பிரண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடருக்கான புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு முழுக்க முழுக்க இங்கிலாந்து அணியை கவனிப்பதற்காக சென்றுவிட்டார்.

பதவியில் இருந்து விலகிய பிராண்டன் மெக்கல்லம்.. புதிய பயிற்சியாளரை நியமித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி !! 2

இந்த நிலையில் கொல்கத்தா நைட்ரஸ் அணி தனது அணிக்கு தகுதியான பயிற்சியாளரை நியமிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், நடந்து முடிந்த ரஞ்சித் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைப்பதற்கு காரணமாக இருந்த அந்த அணியின் பயி்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கொல்கத்தா அணி வெளியிட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் இதுகுறித்த தன்னுடைய சந்தோஷமான கருத்தை சந்திரகாந்த் பண்டிட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இதுகுறித்து சந்திரகாந்த் பண்டிட் பேசியிருந்ததாவது, “இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் மற்றும் கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்வேன், நான் அணி வீரர்கள் மற்றும் நண்பர்களிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் எப்படி செயல்படும் அதன் கலாச்சாரம் என்ன என்பதை கேட்டிருக்கிறேன், மேலும் அவர்களில் இருக்கும் அணி உதவியாளர்கள் திறமையைப் பற்றியும் கேட்டிருக்கிறேன், மேலும் அணியில் இருக்கும் வீரர்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு மற்றும் அணியை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்து செல்வதற்கும் மும்முரமாக காத்துள்ளேன்” என்று சந்திரகாந்த் பண்டிட் பேசியிருந்ததார்.

பதவியில் இருந்து விலகிய பிராண்டன் மெக்கல்லம்.. புதிய பயிற்சியாளரை நியமித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி !! 3

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் சிஇஓ வெங்கி மைசூர் பேசியதாவது, நாங்கள் அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குடும்பத்தில் சந்திரகாந்த் இணைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம், நிச்சயமாக இவர் எங்களை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் செல்வார், உள்ளூர் போட்டிகளில் இவர் செய்த சாதனை சிறப்பான ஒன்றாகும், இவரும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளோம் என்று வெங்கி மைசூர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.