தல தோனியின் பிறந்தநாளில் ரத்த தானம் செய்த சென்னை ரசிகர்கள்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் இன்று இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான தோனி, கேப்டன் பதவியில் இருந்தபோது உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பை ஆகியவற்றைக் கைப்பற்றி சாதனைகள் படைத்தார்.
இந்திய அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகினாலும், அவர் இன்னமும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். அவரது தலைமையில் சென்னை அணி 3 முறை கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், இன்று 37வது பிறந்தநாளைக் கொண்டாடும் தல தோனியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், சென்னையைச் சேர்ந்த தோனி ரசிகர்கள் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில், பலரும் பங்கேற்று இரத்தத்தை தானம் செய்து தோனியின் பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளனர்.
#MSDhoni Fans donated blood at a Blood donation camp in #Chennai as part of #HappyBirthdayMSDhoni Celebrations.. pic.twitter.com/H6pKSC0qtx
— Ramesh Bala (@rameshlaus) July 7, 2018