ராஜஸ்தானின் வாட்டி வதைத்த வாட்சன்; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள்
ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
புனே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் மற்றும் அம்பத்தி ராயூடு துவக்கம் கொடுத்தனர். இதில் அம்பத்தி ராயூடு 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன் பின் ஜோடி சேர்ந்த சேன் வாட்சன் – சுரேஷ் ரெய்னா கூட்டணி ராஜஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.
சுரேஷ் ரெய்னா 46 ரன்களிலும், பின்னர் வந்த தோனி 5 ரன்களிலும், பில்லிங்ஸ் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சேன் வாட்சன் 51 பந்துகளில் ஐ.பி.எல் அரங்கில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். சேன் வாட்சன் 106 ரன்களும், பிராவோ 24 ரன்களும் எடுத்து கொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி 203 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து சேன் வாட்சனின் இந்த அதிரடி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
அதில் சில;
Another ?!! Played @ShaneRWatson33 ??? @ChennaiIPL on for a biggie #entertainer #IPL
— Isa Guha (@isaguha) April 20, 2018
First @henrygayle and now @ShaneRWatson33…. older players are taking the ground by storm!! Vintage wine only gets better. Special mentions @msdhoni #CSKvRR #VIVOIPL2018 ✌?
— Pragyan Ojha (@pragyanojha) April 20, 2018
Age is just a number in this #VIVOIPL 38 = ?@henrygayle & 36 = ?@ShaneRWatson33 ??????????
— Lisa Sthalekar (@sthalekar93) April 20, 2018
Kya bachhe ne kya khela hay aj ??#CSKvsRR #watson #ucantbuyexperience
— Irfan Pathan (@IrfanPathan) April 20, 2018
https://twitter.com/SamreenRazzaqui/status/987359922357760000
Watto family orey the happy! #WhistlePodu #Yellove #CSKvRR ?? pic.twitter.com/WJstS0jwJ9
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2018
Fewer sixes than Gayle in his century, but also fewer balls to reach three-figure mark. This is a top class century by Shane Watson…
— Cricketwallah (@cricketwallah) April 20, 2018
#CSKvRR
Yesterday, Chris Gayle. Today, Shane Watson.
Two excellent centuries by RCB alumni.— Ramesh Srivats (@rameshsrivats) April 20, 2018
Senior Player Watson Scored A Century For CSK ?
Experience makes you a better player ??
Age Doesn't Matter ??? pic.twitter.com/lR1uLCzZDV— DHONIsm™ ❤️ (@DHONIism) April 20, 2018