கொரோனோ காரணமாக உயிரிழந்த சேத்தன் சக்காரியா தந்தை!
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சக்காரியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாகவும் விளையாடினார். கோரோனோ காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக சக்காரியா தந்தை கான்ஜி பாய் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி வந்தது. இந்நிலையில் அவர் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு கொரனோ நெகட்டிவ் என வந்தது. இதனை அடுத்து சக்காரியா ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டதால் தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கே சென்று தனது தந்தையும் நேரில் பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பார்த்து அதற்கு அடுத்த நாளே அவர் உயிரிழந்து விட்டார்.

ஐபிஎல் வருமானம் மூலம் எனக்கு நல்லது நடந்துள்ளது
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூலமாக தனக்குக் கிடைக்கப்பெற்ற வருமானத்தை தனது தந்தையின் சிகிச்சைக்கு செலவு செய்து வருவதாக சர்க்காரியா கூறியிருந்தார். தனது வீட்டில் தான் ஒருவர் தான் தற்போது வருமானம் ஈட்டி வருவதாகவும், ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்த பணம் தற்போது தனது தந்தையின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக அமைந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவருடைய தந்தையின் கொரோனா சிகிச்சைக்காக குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அணியிலிருந்து தனது ஊருக்குச் சென்றவுடன் தனது தந்தையை நேரில் சென்று பார்த்து இருக்கிறார். தன் வருமானத்தின் மூலம் தனது தந்தையின் சிகிச்சையை பார்ப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் சந்தோசமாக அவர் கூறியிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது தந்தை இழப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோதனைக்கு மேல் சோதனைக்கு ஆளான சக்காரியா
சில மாதங்களுக்கு முன்னதாக அவரது சகோதரர் இறந்த செய்தி அனைவரும் அறிவார்கள். தற்பொழுது அவருடைய தந்தையும் இறந்து விட்டது அவருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. ஒரு மனிதருக்கு அடுத்த இடத்தை இவ்வாறு நடப்பது நல்லதல்ல என்று தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது அனுதாபங்களை கூறி வருகின்றனர்.