உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம்

நிகழ்கால கிரிக்கெட் உலகின் வேகப்பந்து வீச்சாளர்களில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் முகமது ஷமி தான் பெஸ்ட் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சேட்டன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோருடன் இளம் ஃபாஸ்ட் பவுலர்களான நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரும் இணைந்து மிரட்டுகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக பும்ரா ஆடாததால், இஷாந்த் சர்மாவும் ஷமியும்தான் முதல் போட்டியில் ஆடினார்கள்.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் என்ற கலவையில் தான் இந்திய அணி இறங்கும். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அப்படித்தான் இறங்கியது. இஷாந்த் சர்மா மற்றும் ஷமி ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக களமிறங்கினர்.

உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் !! 1

போட்டி நடந்த விசாகப்பட்டினம் ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. பிட்ச்சில் ஒன்றுமே இல்லை. எனவே ஃபாஸ்ட் பவுலர்கள் விக்கெட்டே வீழ்த்த முடியாமல் திணறினர். எதிரணியில் ரபாடா, ஃபிளாண்டர் ஆகியோருக்கு சுத்தமாக விக்கெட்டே விழவில்லை. குறிப்பாக மூன்றாம் நாளுக்கு பிறகு ஃபாஸ்ட் பவுலர்களின் பருப்பு சுத்தமாக வேகவில்லை.

எனவே கடைசி இன்னிங்ஸில் அஷ்வினும் ஜடேஜாவும் தான் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், மொக்கை பிட்ச்சில் அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர் ஷமி தான். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தில் அஷ்வினே விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், அபாரமாக பந்துவீசிய ஷமி, டுப்ளெசிஸ், பவுமா, டி காக் ஆகியோரை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர் தான்; முன்னாள் வீரர் புகழாரம் !! 2

இந்தநிலையில், முகமது ஷமி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சேட்டான் ஷர்மா ரிவர்ஸ் ஸ்விங் பவுலர்களில் ஷமி தான் நம்பர் 1 என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேட்டம் ஷர்மா பேசியதாவது, “ஷமியின் பந்துவீச்சில் தனித்துவம் உள்ளது, அவரிடம் நிறைய டெக்னிக்குகள் உள்ளது அவரது பந்துவீச்சு ஸ்டைலிலேயே தெரிகிறது என்னை பொறுத்தவரையில் தற்பொழுதுள்ள ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளர்களில் முகமது ஷமி தான் நம்பர் 1 வீரர்” என்று தெரிவித்துள்ளார். • SHARE
 • விவரம் காண

  “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

  "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

  சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

  இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

  பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!

  கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. - கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு! விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை...

  தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! எதற்காக தெரியுமா?

  தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! அவர் எதற்காக தெரியுமா? கால்பந்து போட்டிகளில் இவர் எப்படி வளர்ந்தாரோ அதேபோலவே நானும் கிரிக்கெட் போட்டிகளில்...