107, 174, 49*, 66, 132... லண்டனில் பேயாட்டம் ஆடும் புஜாரா; சிஎஸ்கே அணி செய்த துரோகம் தான் அனைத்திற்கும் காரணம் - புஜாரா பகீர் பதில்! 1

லண்டனில் ஒருநாள் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் புஜாரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்த ஏமாற்றம் தான் இந்த அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் என்று பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் நீங்க முடியாத இடத்தை பிடித்து வந்த புஜாரா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சராசரிக்கும் குறைவாகவே விளையாடி வருவதால் டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்தபடியே ஒரு போட்டியில் கூட அவரை விளையாட வைக்கவில்லை. இது அனைவருக்கும் அறிந்த விஷயம் தான் என்றாலும் சித்தேஸ்வரர் புஜாரா போன்ற அனுபவமிக்க வீரர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையையும் கைப்பற்றியது. ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு கொடுத்த ஏமாற்றம் காரணமாக ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிரடியான வீரராக மாறியுள்ளார் புஜாரா. தற்போது லண்டனில் கவுண்டி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சஸக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாரா இதுவரை யாரும் கண்டதாக அளவிற்கு அதிரடியாக விளையாடுகிறார்.

107, 174, 49*, 66, 132... லண்டனில் பேயாட்டம் ஆடும் புஜாரா; சிஎஸ்கே அணி செய்த துரோகம் தான் அனைத்திற்கும் காரணம் - புஜாரா பகீர் பதில்! 2

9 போட்டிகளில் 624 ரன்கள் குவித்திருக்கிறார். அதில் மூன்று சதங்கள் இரண்டு அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் மிகவும் நிதானமாக விளையாடி வந்த புஜாரா எவ்வாறு இது போன்ற அதிரடியான ஆட்டத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டார் என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்து வந்தன. இதற்கு பதில் அளித்த புஜாரா,

“2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு அங்கமாக நான் இருந்தேன். ஆனால் நான் விளையாட வைக்கப்படவில்லை என்னை சுற்றி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எனக்கு நானே ஒன்றை சொல்லிக் கொண்டேன். குறுகிய பார்மட் கிரிக்கெட்டில் எனது விக்கெட்டிற்கு மிகப்பெரிய மதிப்பை நான் உருவாக்க வேண்டும். அதற்காக நிறைய ஷார்ட் விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டேன்.”

“ராயல் லண்டன் தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னதாக பயிற்சியாளரிடம் சென்று நான் எனது எண்ணத்தை கூறினேன். நான் பயிற்சி செய்யும் பொழுது அவர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். ஆகையால் என்னால் இப்படி சிறப்பாக செயல்பட முடிகிறது. விரைவில் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்பதா என்பது பற்றி முடிவு செய்வேன்.” என்றார்.

107, 174, 49*, 66, 132... லண்டனில் பேயாட்டம் ஆடும் புஜாரா; சிஎஸ்கே அணி செய்த துரோகம் தான் அனைத்திற்கும் காரணம் - புஜாரா பகீர் பதில்! 3

ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் புஜாரா, 107, 174, 49*, 66 மற்றும் 132 ரன்களை அடித்திருக்கிறார். இதே அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய புஜாரா 1094 ரன்கள் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *