வீடியோ; சிக்ஸர்கள் பறக்கவிட்டு மாஸ் காட்டிய புஜாரா.. ஷாக்கான ரசிகர்கள் !! 1

பொறுமையான ஆட்டக்காரர் என பெயரெடுத்த சட்டீஸ்வர் புஜாரா ஐபிஎல் தொடருக்கான வலைபயிற்சியின் போது சிக்ஸர்களாக பறக்கவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வீடியோ; சிக்ஸர்கள் பறக்கவிட்டு மாஸ் காட்டிய புஜாரா.. ஷாக்கான ரசிகர்கள் !! 2

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தீவிரமாக தயார் செய்து வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக சில வெளிநாட்டு வீரர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக பயிற்சியில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.

வீடியோ; சிக்ஸர்கள் பறக்கவிட்டு மாஸ் காட்டிய புஜாரா.. ஷாக்கான ரசிகர்கள் !! 3

இந்தநிலையில், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள சட்டீஸ்வர் புஜாரா வலைபயிற்சியின் போது சிக்ஸர்கள் பறக்கவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வலைப்பயிற்சியின்போது புஜாரா பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாரா எப்படி டி20 தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. இப்போது புஜாரா பந்துகளை சிக்ஸர்களுக்கு தெறிக்கவிடும் வீடியோ சிஎஸ்கே ரசிகர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வர வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளது குறித்து புஜாரா பேசுகையில், “களத்தில் நிற்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். மஞ்சள் ஜெர்ஸி அணிந்து விளையாடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’’ என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கேப்டன் தோனி, ருதுராஜ், ராயுடு, புஜாரா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. தனது பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளார். இதையடுத்து அவரும் பயிற்சி முகாம்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *