வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி நட்சத்திரம் வீரர் கிறிஸ் கெயில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
கிரிக்கெட் பரிமானத்தின் புதிய போட்டியாக 10 ஓவர்கள் போட்டி நடைபெற்று துபாயில் கடந்த சில நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.டி10 எனப்படும் இந்த போட்டியில் உலகில் உள்ள பல நட்ச்சத்திர வீரர்களும் களந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அபுதாபி மற்றும் மராத்தா அரபியன்ஸ்ஸ் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது, இந்த போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் செய்த அரபியன்ஸ்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்தது, இதனை செய்த அபுதாபி அணி அதிரடியாக விளையாடியது.
இதில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 22 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார் அதிலும் குறிப்பாக 12 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார், இன்னும் அவர் எடுத்த 84 ரன்களிலும் 6 ரன்கள் மட்டுமே ஓடி எடுத்தார்,இதன் மூலம் மிகக் குறைந்த பந்தில் அரைசதத்தை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

கெய்லின் இந்த அதிரடியான ஆட்டத்தால் அபுதாபி அணி வெற்றி பெற்றது இன்னும் ஒரு போட்டியை மீதமுள்ள நிலையில் அபுதாபி அணி நிச்சயம் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும், கெய்லின் இந்த வெறித்தனமான விளையாட்டு கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.