Cricket, India, Rohit Sharma, Fastest ODI 200s, Virender Sehwag

அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் போதுமான அளவிற்கு தனது பங்களிப்பை அளித்து விட்டார். இது அவருக்கு ஓய்வு பெற சரியான தருணமாக இருக்க முடியும் என ராபின் உத்தப்பா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா போன்ற அணிகள் மிகச் சிறப்பாக ஆடிவருகின்றனர். அதேநேரம் முன்னணி அணிகளாக இருந்து வந்த வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் தடுமாறி வருகின்றன. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இந்த அணிகளுக்கு இருந்து வருகிறது.

"கிறிஸ் கெயில் ஓய்வு பெற இதுதான் சரியான தருணம்" இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து!! 1

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் தடுமாறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஒவ்வொரு முறையும் சரியான துவக்கம் அமையாததும் அவ்வபோது வீரர்கள் காயத்தினால் அவதிப்படுவதுமே ஆகும்.

குறிப்பாக கிறிஸ் கெயில் ஆடிய 7 போட்டிகளில் வெறும் 194 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதுவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறந்த துவக்கம் அமையாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

"கிறிஸ் கெயில் ஓய்வு பெற இதுதான் சரியான தருணம்" இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து!! 2

இவை ஒருபுறம் இருக்க, உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ் கெயில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த முடிவை கிறிஸ் கெயில் நேற்று திரும்பப் பெற்றுள்ளார். இந்திய அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த விவாதத்தில் பேசிய ராபின் உத்தப்பா கூறுகையில், கிறிஸ் கெயில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போதுமான பங்களிப்பை அளித்துள்ளார். பிரையன் லாரா எப்படி டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான வீரராக இருந்தாரோ அதே போல கெயில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். கிரிக்கெட் உலகிற்கு ஒரு முன்னோடியாகவும் தனது அதிரடி மூலம் கிறிஸ் கெயில் இருந்து வருகிறார்.

"கிறிஸ் கெயில் ஓய்வு பெற இதுதான் சரியான தருணம்" இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து!! 3

இப்படி ஒரு உன்னத தருணத்தில் கிறிஸ் கெயில் தாராளமாக ஓய்வு பெறலாம். இது அவருக்கு வீர நடைபோட்டு வெளியேறும் தருணமாகவும் இருக்கும் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *