டி10 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென்று கட்டளையிட்ட கிறிஸ் கெயில் ! 1

 டி10 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க விருப்பம் தெரிவித்த  கிறிஸ் கெயில் !

கிரிக்கெட்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் போன்ற தொடர்கள் போலவே டி10 தொடர்களும் ஒரு சில இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி10 போட்டி நடத்துவதன் மூலம் உள்ளூர் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களை விட இந்த டி10 தொடரை நடத்துவதற்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். 

டி10 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென்று கட்டளையிட்ட கிறிஸ் கெயில் ! 2

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல் டி10 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கிறிஸ் கெய்ல் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கும் டி10 தொடரில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். கிறிஸ் கெய்ல் அபுதாபி அணிக்காக விளையாட போகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விளையாடி தற்போது இதுபோன்ற டி10 போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கும் டி10 தொடர் குறித்து கூறுகையில் “அபுதாபியில் நடைபெறும் டி10 தொடர் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.  இன்னும் சில நாட்களில் இந்த தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறேன். மீண்டும் களத்தில் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

டி10 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென்று கட்டளையிட்ட கிறிஸ் கெயில் ! 3

தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரரான கிறிஸ் மோரிஸும் எனது அணியில் இடம் பெற்று இருக்கிறார். இதற்கு முன்னர் அவருடன் விளையாடி இருந்தாலும் தற்போது இந்த டி10 தொடரில் அவருடன் விளையாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்”. 

மேலும் பேசிய கெயில் “ இதுபோன்ற டி10 கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் கிரிக்கெட் மேலும் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது. இந்த டி10 கிரிக்கெட் போட்டியை  நடத்துவதற்கான நேரம் குறைவு என்பதால் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும். இந்த போட்டியை அமெரிக்காவில் நடத்தினால் நல்ல வரவேற்பும்  நல்ல வருமானமும் கிடைக்கும்”  என்று கூறியுள்ளார்.

டி10 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென்று கட்டளையிட்ட கிறிஸ் கெயில் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *