பணத்தை விட நாடு தான் முக்கியம்; ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளார் !! 1

பணத்தை விட நாடு தான் முக்கியம்; ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளார்

ஐபிஎல் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக டெல்லி கேபிடள்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிரடியாக விலகியுள்ளார்.

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட டைட்டில் வென்றிராத டெல்லி கேபிடள்ஸ் அணி, முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த சீசனில் பிளே ஆஃபில் தோற்று வெளியேறிய டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.

பணத்தை விட நாடு தான் முக்கியம்; ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளார் !! 2

அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் படையை அருமையாக உருவாக்கியுள்ளார். இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியை சரியான முறையில் வழிநடத்துகிறார் பாண்டிங்.

டெல்லி அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் என திறமையான இளம் வீரர்களை கொண்ட வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட டெல்லி அணி, ஏலத்திற்கு முன்பாக ரஹானே மற்றும் அஷ்வினை மற்ற அணிகளிடமிருந்து பெற்றது.

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களை எடுத்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் எடுக்கப்பட்டனர்.

பணத்தை விட நாடு தான் முக்கியம்; ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளார் !! 3

இந்நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது முடிவை டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஆடவுள்ளது. எனவே இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், அந்த தொடருக்காக புத்துணர்ச்சியுடனும் உடற்தகுதியுடனும் இருப்பதற்காக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.

குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் அதிக பணம் புழங்கும் ஐபிஎல் தொடரில் ஆடுவதற்குத்தான் அனைத்து வீரர்களும் விரும்புவார்கள். ஆனால் தனது தேசிய அணிக்கு ஆடுவதுதான் முக்கியம் என்று கூறி ஐபிஎல்லில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *