நீ தான்யா பெரிய மனுஷன்.. தன்னுடைய சாதனையை காலி செய்தவர் அஸ்வின் என்றும் பாராமல் மனமுவந்து பாராட்டிய அனில் கும்ப்ளே! 1

தனது சாதனையை முறியடித்த அஸ்வினை ஒரே வார்த்தையில் தரமாக பாராட்டியுள்ளார் அணில் கும்ப்ளே.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் கவாஜா அபாரமாக விளையாடி 180 ரன்கள் அடித்தார். கவாஜா உடன் ஜோடி சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்த கேமரூன் கிரீன், 114 ரன்கள் அடித்திருந்தபோது, முக்கியமான கட்டத்தில் இவரது விக்கெட்டை திட்டமிட்டு தூக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

நீ தான்யா பெரிய மனுஷன்.. தன்னுடைய சாதனையை காலி செய்தவர் அஸ்வின் என்றும் பாராமல் மனமுவந்து பாராட்டிய அனில் கும்ப்ளே! 2

அதன்பிறகும் ஆஸ்திரேலியா அணியினர் நிற்கவில்லை. ஒன்பதாவது விக்கெட்டுக்கு டாட் மர்பி மற்றும் நேத்தன் லயன் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. இருவரின் அஸ்வின் தூக்கினார்.

நான்காவது டெஸ்டில் இந்திய அணி ஒவ்வொரு முறை பின்னடைவை சந்திக்கும்போதும் ரவிச்சந்திரன் அஸ்வின் சரியான நேரத்தில் உள்ளே வந்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து மீண்டும் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பினார். முதல் இன்னிங்ஸில் இறுதியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நீ தான்யா பெரிய மனுஷன்.. தன்னுடைய சாதனையை காலி செய்தவர் அஸ்வின் என்றும் பாராமல் மனமுவந்து பாராட்டிய அனில் கும்ப்ளே! 3

இதன் மூலம் இந்தியா-ஆஸ்திரேலியா காலம்காலமாக நடக்கும் பார்டர் கவாஸ்கர் டிராஃபில் டெஸ்ட் தொடர்களில்,  அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் 111 விக்கெடுகளுடன் முதல் இடத்தில் இருந்த அனில் கும்ப்ளேவை பின்னுக்குதள்ளி 116 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் அஸ்வின்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட் எடுத்தவர்களில், 113 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் ஆஸி., ஸ்பின்னர் நேதன் லயன் சாதனையை சமன் செய்திருக்கிறார் அஸ்வின்.

இது மட்டுமல்லாது, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக  5+ விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடத்திற்கு வந்திருக்கிறார் அஸ்வின். இதற்கு முன்னர் அணில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் தலா 25 முறை ஒரு இன்னிங்ஸில் 5+ விக்கெட்டுகளை இந்திய மைதானங்களில் எடுத்திருந்தனர். அஸ்வின் 26வது முறையாக 5+ விக்கெட்டுகளை கைப்பற்றி, அனில் கும்ப்ளேவை பின்னுக்குத்தள்ளி, பட்டியலில் தனி ஆளாக முதலிடம் பிடித்துள்ளார்.

நீ தான்யா பெரிய மனுஷன்.. தன்னுடைய சாதனையை காலி செய்தவர் அஸ்வின் என்றும் பாராமல் மனமுவந்து பாராட்டிய அனில் கும்ப்ளே! 4

நான்காவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்சில் அபாரமாக பந்துவீசி அணில் கும்ப்ளேவின் பல சாதனைகளை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வினை எந்தவித தயக்கமும் இன்றி ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுதலை தெரிவித்து ஜாம்பவான் மட்டுமல்ல, பெருந்தன்மையான மனிதனும் கூட என்று வெளிக்காட்டியுள்ளார் அனில் கும்ப்ளே. அவர் பதிவிட்டதாவது:

“சிறப்பாக செயல்பட்டிருக்கிறாய் அஸ்வின், நேர்த்தியாக உள்ளது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *