தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம் !! 1
Van Ryneveld, who bowled legspin and batted in the middle order, made his Test debut in the Trent Bridge Test in 1951 against England, which South Africa won by 71 runs.
தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிளைவ் வேன் ரைனெவெல்ட் (89) நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

லெக் ஸ்பின் பவுலரான கிளைவ் 1951ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மூலம் தென் ஆப்ரிக்கா அணிக்கு அறிமுகமானவர். அந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 71 ரன்கள்ள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம் !! 2
He compiled 4803 runs and bagged 206 wickets in first class cricket. He also captained the country in eight Tests. Under his leadership, South Africa won two, lost four and drew two Tests.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்காக 1951 முதல் 1958 வரை விளையாடியுள்ள இவர், எட்டு டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி இரண்டு வெற்றிகளையு, நான்கு தோல்விகளையும் சந்தித்துள்ளது. இரண்டு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இவரின் அதிகபட்ச ஸ்கோர் 83 ஆகும். இது தவிர 1954ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது இவரது சிறந்த பந்துவீச்சாகும்.

தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம் !! 3
Van Ryneveld, who bowled legspin and batted in the middle order, made his Test debut in the Trent Bridge Test in 1951 against England, which South Africa won by 71 runs.

இது மட்டுமல்லாமல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 4803 ரன்களை எடுத்துள்ள இவர், பந்துவீச்சு மூலம் 206 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழுநேர அரசியல் வாதியாக மாறிய இவர், இரண்டு வருடங்கள் தென் ஆப்ரிக்காவின் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 11 எம்.பிகளுடன் சேர்ந்து Progressive party என்னும் புதிய கட்சியை தொடங்கினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *