கடந்த 2014ல் டெஸ்ட் பெற்ற இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதிலிருந்து தற்போது வரை ஒருநாள் மற்றும் டி20போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். அதன் பின்னரும் படிப்படியாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து கேடன் பதவியில் இருந்து விளகினார் தோனி. தற்போது முழு அணியின் கோலியின் கேப்டன்சிப்பில் இருக்கிறது.
அதே போல் உள்ளூர் போட்டிகளிலும் ஆடுவதில்லை தோனி, தனது ஓய்வு நேரங்களில் பல வேலைகளை செய்துவரும் தோனி சமீபத்தில் துபாயில் ஒரு ஸ்போர்ட்ஸ் க்ளப் ஒன்றினை துவங்கினார். அதே போல் ஓய்வு நேரத்தில் இன்று ஶ்ரீநகரில் உள்ள ராணுவ பள்ளிக்கு சென்றார்.
இந்திய ராணுவத்தில் கவுரவ கலோனல் பதவி பெற்றுள்ள எம்.எஸ்.தோனி புதனன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ராணுவப் பள்ளிக்கு திடீர் வருகை தந்ததில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சினார் கார்ப்ஸ் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் தோனி மாணவர்களுடன் உரையாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மாணவர்களிடம் பேசிய தோனி விளையாட்டையும், படிப்பையும் சம அளவில் பாவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
டிசம்பர் 10-ம் தேதி இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர் தொடங்கும்போது தோனியை மீண்டும் களத்தில் பார்க்கலாம்.
இந்நிலையில் ஸ்ரீநகர் ராணுவ ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “லெப்டினண்ட் கலோனல் தோனி உற்சாகமான மாணவர்களுடன் உரையாடினார். படிப்பு, விளையாட்டு இரண்டின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.”