என்னோட அந்த பிரச்சினையை சொல்லி சொல்லி குத்தி காமிச்சாங்க.. வெறித்தனமா வொர்க் பண்ணி சரி பண்ணேன் - ஷ்ரேயாஸ் ஐயர் தரமான பேச்சு! 1

எனக்கு ஷாட் பந்துகளில் பிரச்சனை இருப்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள், இப்போது அனைவரும் சைலண்ட் ஆகிவிட்டார்கள் என பேட்டியளித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான ஷ்ரேயாஸ் ஐயர், முதல் டெஸ்ட் போட்டியில் 86 ரன்கள் அடித்திருந்தார்.

என்னோட அந்த பிரச்சினையை சொல்லி சொல்லி குத்தி காமிச்சாங்க.. வெறித்தனமா வொர்க் பண்ணி சரி பண்ணேன் - ஷ்ரேயாஸ் ஐயர் தரமான பேச்சு! 2

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 94/4 என இருந்தபோது, ரிஷப் பண்ட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயாஸ் ஐயர், அணியை சரிவிலிருந்து மீட்டார்.  87 ரன்களும் அடித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர், அணியை வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் சென்று இறுதியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் அடித்த மூன்று பவுண்ரிகளுக்கு பிறகு மறுமுனையிலிருந்த அஸ்வின் மீதான அழுத்தம் குறைந்தது. பின்னர் அவர் அடிக்க துவங்கினார். இறுதியில் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

இந்த தொடர் முழுவதும் மிகவும் நிதானத்துடன் விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு கடந்த ஆண்டுகளில் ஷார்ட் பந்துகளில் பிரச்சனை இருந்திருக்கிறது. அதை தவறுதலான ஷாட்கள் அடித்து ஆட்டம் இழந்திருக்கிறார். இம்முறையும் இவரை சோதிக்க பவுலர்கள் தொடர்ச்சியாக ஷார்ட் பந்துகளை வீசினர். அதை லாவகமாக எதிர்கொண்டு ஆட்டம் இழக்காமல் நன்றாக விளையாடினார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அவரிடம் கேள்விகளும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில்,

“வர்ணனையாளர்கள் மற்றும் போட்டிக்கு வெளியில் இருந்தவர்கள் பலர் என்னிடம் ஷார்ட் பந்தில் பிரச்சனை இருக்கிறது என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். அது என்னை பெரிதளவில் பாதித்தது. மேலும் ஷார்ட் பந்துகள் எனக்கு வீசும் போது ரன்களே வருவது இல்லை. அதுவும் பிரச்சனை என்று பட்டது.

ஷார்ட் பந்துகளுக்கு என்று பிரத்தியேகமாக நான் ஒன்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. சிறுசிறு மாற்றங்கள் மட்டுமே செய்தேன். கண் மூடி யோசித்துப் பார்த்தால் ஷார்ட் வந்துகளை அப்படியே விட்டுவிட்டால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது. நானாக போய் அடிக்கும் முயற்சிக்கும் பொழுது தான் ஆட்டமிழந்து விடுகிறேன் என்று தோன்றியது. எனினும் ரன்களும் வரவேண்டும் என்பதற்காக பயிற்சியும் செய்து, சரி செய்து கொண்டேன்.

என்னோட அந்த பிரச்சினையை சொல்லி சொல்லி குத்தி காமிச்சாங்க.. வெறித்தனமா வொர்க் பண்ணி சரி பண்ணேன் - ஷ்ரேயாஸ் ஐயர் தரமான பேச்சு! 3

இந்த டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் தொடரிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் எனக்கு தொடர்ந்து ஷார்ட் பந்துகளையே வீசி வந்தனர். முன்பு போல இல்லாமல் சுதாரித்துக் கொண்டேன். எந்த பந்தை அடிக்க வேண்டும் என்று மிகவும் தெளிவாகவும் கவனத்துடனும் இருந்தேன். அது எனக்கு நல்ல பலனை கொடுத்திருக்கிறது. மேலும் ஷார்ட் பந்துகளை தற்போது அடிக்கவும் முடிகிறது. அதிலிருந்து ரன்களும் வருவது இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என்றார் ஷ்ரேயாஸ் ஐயர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *