நடராஜன் வீட்டில் நற்செய்தி! உலகிற்கு முதன்முறையாக அறிமுகம் செய்த வார்னர்! 1

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் வீட்டில் நற்செய்தி ஒன்று நிகழ்ந்துள்ளது இதனை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் அதன் கேப்டன் டேவிட் வார்னர்.

ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் துவங்கி லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது பிளே ஆப் சுற்றுக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது.

இரண்டாவது பிளே ஆப் மற்றும் முதல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் எஸ்ஆர்எச் இரு அணிகளும் பலப்பரிட்சை மேற்கொண்டன. இதில் பெங்களூரு அணியை ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது.

இந்த சீசனில் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா? செல்லாதா? என தத்தி தவித்த நிலையில், தற்போது இரண்டாவது எலிமினேட்டர் போட்டி வரை சென்றதற்கு, வார்னர் பேட்டிங் வரிசையில் நல்ல பக்கபலமாக திகழ்ந்து வந்தார்.

அதேபோல பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் இல்லாமல் பின்னடைவு ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த நாடராஜன் என்பவர் அபாரமாக பந்துவீசி தனது அசாத்திய திறமை மூலமாக ஹைதராபாத் அணிக்கே உரித்தான பந்துவீச்சு ஆதிக்கத்தை மீட்டெடுத்தார்.

குறிப்பாக 15 முதல் 20 ஓவர்களுக்குள்ளாக அதிக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார். இந்த சீசன் இவருக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்தது. 15க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதில் ஏராளமான விக்கெட்டுகள் யார்க்கர் மூலம் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடராஜன் வீட்டில் ஒரு நற்செய்தி நிகழ்ந்துள்ளது. இதனை எலிமினேட்டர் போட்டி முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அனைவருக்கும் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடராஜன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் வாழ்த்துக்கள் இன்று காலை நடராஜனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த வெற்றியை அந்த குழந்தைக்கு சேரும். இப்படி ஒரு சிறந்த பரிசு அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.” என குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *