எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அதன் பயிற்சியாளர் எவ்வளவு திறமையாக உள்ளாரோ அந்த அளவிற்கு அந்த அணியும் மிக சிறப்பாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்குப் பின்னும் நிச்சயம் அந்த அணியின் பயிற்சியாளர்களின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கும்.
இருந்தாலும் சில அணிகளில் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கு ஒத்துப் போவதில்லை மேலும் சில அணிகளில் பயிற்சியாளர்களுக்கு அணி நிர்வாகத்தினருக்கும் ஒத்துப்போவதில்லை இந்நிலையில் இந்திய அணிக்காக அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கிய 5 பயிற்சியாளர்கள் பற்றி இங்கு காண்போம்.
கபில் தேவ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்திய அணிக்கு முதன்முதலாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்து சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு என தனி ஒரு மதிப்பை பெற்று கொடுத்தவர். மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தனது ஓய்வுக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தினார்.
ஆனால் இவர் மீது பல சர்ச்சைகள் நிகழ்ந்தது, குறிப்பாக மேட்ச் பிக்சிங் செய்த குற்றம் சுமத்தப்பட்டது, மேலும் கபில்தேவிர்க்கும் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு அப்பொழுது கருத்து ஒத்துப் போகாமல் இருந்தது, இது சம்பந்தமாக சச்சின் வெளியிட்ட ஆட்டோ பயோகிராபியில் தெளிவாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கபில் தேவால் ஒரு பயிற்சியாளராக மிக சிறப்பாக செயல்பட முடியவில்லை இதன் காரணமாக செப்டம்பர் 1999இல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று அடுத்த ஆண்டு செப்டம்பர் 2000 இல் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
