அனில் கும்ப்ளே
இந்தியாவிற்கு புகழைத் தேடிக் கொடுத்தது மற்றொரு ஜாம்பவானான அணில் கும்ப்ளே 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவருடைய ஆக்ரோஷமான பயிற்சியும் விராட் கோலியின் ஆக்ரோஷமான திறமையும் இந்திய அணிக்கு வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த ஆண்டு இந்திய அணி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிக சிறப்பாக செயல்படவில்லை நியூசிலாந்து அணியிடம் (3-0) இங்கிலாந்து அணியின் (4-1) மற்றும் ஆஸ்திரேலியா அணியிடம்(2-1) என தோல்வியை தழுவியது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்திய அணிக்கு ஏற்றமான புது ஒரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்குமாரும் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இவருடைய ராஜினாமாவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் விராட் கோலி மற்றும் அணில் கும்ப்ளே விற்கும் ஒத்துப் போகாத சில சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
