ரவி சாஸ்திரி
அனில் கும்ப்ளே வின் பதவி விலகலுக்கு பிறகு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேவைப்பட்டது, இதனால் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வுசெய்யப்பட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆத்திரமடைந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதில் குறிப்பாக ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பதிவு கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். இருந்தபோதும் 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக ரசிகர்களும் சில கிரிக்கெட் வல்லுனர்களும் இவர் மீது அதிருப்தியடைந்து இவரை பதவி விலகுமாறு கூறியிருந்தனர், மேலும் இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேனை தேர்வு செய்ததிலும் இவர் மீது அதிருப்தி அடைந்தனர்.
இருந்த போதும் இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று சிறந்த சாதனை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா அணியின் சொந்த மண்ணிலேயே சென்று அந்த அணியை இருமுறை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நான்கு ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து இன்றுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று பணியை சிறப்பாக கையாளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
