வீடியோ: கேட்ச் பிடிக்க வந்த வீரரை கை ஓங்கி அடிக்க போன சர்ச்சை ! வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் !
வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவ்வப்போது எதிரணி வீரர்களுக்கு எதிராகவும் தனது அணி வீரர்களுக்கு எதிராக ஏதாவது சர்ச்சை செய்து மாட்டிக் கொள்வார். வங்கதேச நாட்டில் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரில் இப்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் இன்றையப் போட்டியில் தாக்கா – பரிஷல் அணிகள் மோதியது. தாக்கா அணிக்கு கேப்டன், விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகிர் ரஹீம். அப்போது 17 ஆவது ஓவரின்போது பரிஷல் அணி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல். பரிஷல் அணியின் அபீஃப் ஹசைன் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது 17வது ஓவரில் கடைசி பந்து வீசப்பட்டது. அதனை அபீஃப் ஹசைன் தூக்கி அடித்தார். ஆனால் அது அவரது பேட்டில் சரியாக படாமல் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே சென்றது. அப்போது அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்தப் பந்தை பிடிக்க பீல்டரான நசும் ஓடி வர இருவரும் மோதிக்கொள்வது போல சென்றனர். இறுதியாக முஷ்பிகுர் ரஹீம் அந்த கேட்ச்சை கைப்பிடித்தார். பிடித்து விட்டு அவரை அடிக்க கையை ஓங்கிய படி சென்றார் கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டினார். ஒரு சின்ன விஷயத்திற்கு இப்படி செய்ததால் சக வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினார்.

29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆனாலும் வங்கதேச தேசிய அணியின் முக்கிய வீரரும் அனுபவ வீரருமான ரஹீம் இப்படி செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு சக இளம்பிறை எப்படி நடத்துவது என்று தெரியாமல் அவர் மீது சிறிய தவறுக்காக கோபத்தை ஆடுகளத்தில் அவமானப்படுத்தி வெளிப்படுத்தியதால் அனைவரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Calm down, Rahim. Literally. What a chotu ??
— Nikhil ? (@CricCrazyNIKS) December 14, 2020
(? @imrickyb) pic.twitter.com/657O5eHzqn