ஆமா.. இந்திய கேப்டனின் பேட்டிங்கை காப்பி அடித்தேன் – கடைசியில் உண்மையை ஒப்புக்கொண்ட பாக்., கேப்டன்!
இந்திய அணி கேப்டனின் பேட்டிங் ஸ்டைலை காப்பி அடித்ததால் என்னால் நன்றாக ஆடமுடிகிறது என தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் பாக்., அணியின் லிமிடெட் ஓவர் கேப்டன் பாபர் அசாம்.
பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம், 25 வயதிலேயே ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியை பெற்றிருக்கிறார். தொடர்ந்து சிலகாலம் டி20 போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முன்னணி பங்கு வகித்து வரும் பாபர் அசாம், சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். விராட் கோலியின் சாதனைகள் ஒருநாள் போட்டியில் அதிக 2000, 3000 ரன்கள் என இரண்டையும் தகர்த்தவர் பாபர் அசாம்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியுடன் இவரை ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள், இவரது பேட்டிங்கும் விராட் கோலியை போன்று இருக்கின்றது; அதனால்தான் இவரால் இளம் வயதிலேயே நிறைய சாதனைகள் படைக்க முடிகிறது என விமர்சனங்களை முன்வைத்தனர்.
அண்மையில் வர்ணனையாளர் ஹர்ஷா போலே உடன் நடைபெற்ற பேட்டியின்போது, விராட் கோலியுடன் ஒப்பிட்டு பார்ப்பது குறித்து ஹர்ஷா போலே பாபரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், “ஆம்.. நான் விராட் கோலியின் பேட்டிங் கே காப்பி செய்து ஆடி வருகிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிறது.” என்று எந்த வித தயக்கமும் இன்றி ஓப்பனாக பதிலளித்தார்.
ஊரடங்கு காலத்திற்குப் பிறகு வருகிற ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் ஆட இருக்கிறது. நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாக இருக்கும்.