10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா ! அடுத்த தொடரை மொத்தமாக கைவிட போகும் கிரிக்கெட் வாரியம் ! ரசிகர்கள் கவலை !!
கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் புகுந்து விளையாடி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு பிறகு இங்கிலாந்து அணியின் முதல் முறையாக உயிர் பாதுகாப்பு வளையத்தை வைத்து கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதே உத்தியைக் கடைபிடித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்தி முடித்தது.
இதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் தங்களது கிரிக்கெட் வீரர்களை இப்படித்தான் நடத்தி வருகின்றனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மட்டும் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் வைரஸ் மீண்டும் மீண்டும் அந்த அணியின் வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது.

தென்னாபிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணி வீரர்கள் இரு குழுவாக பிரிந்து முதல் தர போட்டியில் பயிற்சி மேற்கொள்ள தயாராக இருந்தார்கள். அப்போது அனைவருக்கும் கொரோனா வைரஸ் எடுக்கப்பட்டது. இந்த டெஸ்ட் முடிவில் 10 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்து அந்த பயிற்சி ஆட்டத்தை கைவிட்டுவிட்டது. மேலும் இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கைவிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் இதுபோன்ற துரதிஸ்டவசமாக விசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது கடைசி இரண்டு டி20 போட்டிகளின் போது தென் ஆப்பிரிக்க அணியின் இரண்டு வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக அந்த இரண்டு போட்டிகளில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மீண்டும் மீண்டும் அந்த அணியில் வைரஸ் தாக்கி கொண்டே இருப்பதால் அந்த கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் இருக்கிறது.