கிரிக்கெட் வாரியம் இழுத்து மூடல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை! ! அவலநிலை இதுதான்..
மிகப்பெரிய கிரிக்கெட் வாரியத்தை குறிப்பிட்ட காலத்திற்கு இழுத்து மூட முடிவெடுத்துள்ளது பிசிசிஐ கிரிக்கெட் வாரியம். இதற்கான முழு காரணத்தையும் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய வைரஸான கொரோனா எதிரொலியாக பல நாடுகளில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் நடைபெறும் ஒரு சில போட்டிகளும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் வெற்று மைதானம் ஆகவே வீரர்கள் மட்டும் ஆடும் போட்டியாக நடைபெறுகிறது.

இது விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் நடைபெறவிருந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நிறுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற வீரர்களுக்கு இடையே நடைபெற்ற லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரும் நிறுத்தப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இந்நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தை மார்ச் 31ம் தேதி வரை மூடியுள்ளது பிசிசிஐ. இதனால் பெங்கால் வாரியம் பங்கேற்க இருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த முடிவை ஒட்டி மற்ற கிரிக்கெட் வாரியங்களும் விரைவில் தங்களது அசோசியேஷனை தற்காலிகமாக மூட முடிவு எடுத்திருக்கிறது.