வீடியோ; பேட்டை வைத்து அடிக்க முயன்ற பேட்ஸ்மேன் ; அதிர்ச்சியான பேட்ஸ்மேன்
கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விண்டீஸ் வீரர் கீமோ பாலை, பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி பேட்டை வைத்து அடிக்க முயன்றதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடரை, வெஸ்ட் இண்டீஸிலும் கரீபியன் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் நேற்றைய போட்டியில் ஜமாய்கா டாலவாஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் இடையே நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி ஜமாய்கா டாலவாஸ் அணிக்காகவும், விண்டீஸ் வீரர் கீமோ பால் பார்படோஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். அப்போது கீமோ பால் பவுலிங்கில் ஆசிப் அலி சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் அது கேட்ச் ஆகி அவுட்டானார். இதனை கீமோ பால் கொண்டாடினார்.
— Sourav (@Sourav82977842) August 26, 2020
இதனால் கடுப்பான ஆசிப் அலி தன்னுடைய பேட்டால் கீமோ பால் முகத்தில் அடிக்க முயல்வது போல பாவனை செய்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கீமோ பால், அசிப் அலியின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்தார். ஆசிப் அலியின் இத்தகைய செயல் கிரிக்கெட்டின் விதியை மீறுவதாக இருப்பதாக விரைவில் அவரின் செயலுக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.