கிங் கோலிக்கு இடம் இல்லை; 2021ம் ஆண்டிற்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்தது ஆஸ்திரேலியா !! 1

2021 ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் தொடரின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு இன்றோடு நிறைவுபெறும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட பலரும் இந்த வருடத்திற்கான சிறந்த ஆடும் லெவனை தெரியப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 2021 டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை இலங்கை அணியின் கருநாரத்நே தலைமையில் தேர்ந்தெடுத்துள்ளது.

கிங் கோலிக்கு இடம் இல்லை; 2021ம் ஆண்டிற்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்தது ஆஸ்திரேலியா !! 2

அதில் துவக்க வீரர்களாக இலங்கை அணியின் கருணாரத்னே மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளது, இந்த இரண்டு வீரர்களும் இந்த வருடத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மார்னஸ் லபுசென், பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் பவாத் ஆலம், மற்றும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும் தனது அணியின் ஆல்ரவுண்டர்களாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் அக்ஷர் பட்டேல் ஆகிய இருவரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

கிங் கோலிக்கு இடம் இல்லை; 2021ம் ஆண்டிற்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்தது ஆஸ்திரேலியா !! 3

மேலும் 2021 டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர்களாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி மற்றும் சகீன் அஃப்ரிடி ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த 2021 டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ள 2021 டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவன்

ரோகித் சர்மா, திமுத் கருணாரத்ன (c), மார்னஸ் லபுசென், ஜோ ரூட், பவாத் ஆலம், ரிஷப் பண்ட் (wk), ரவி அஸ்வின், கையில் ஜேமிசன், அக்ஷர் பட்டேல், ஹசன் அலி, சகீன் அஃப்ரிடி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *