இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இவர்தான்! கௌதம் கம்பீர் ஓபன் டாக்! 1

இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இவர்தான்! கௌதம் கம்பீர் ஓபன் டாக்!

 

ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை பெற தங்களுக்கு தெரிந்த போல் தங்களது பாணியில் உழைத்து வருகின்றனர்.இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இவர்தான்! கௌதம் கம்பீர் ஓபன் டாக்! 2

அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் சுனில் நரைன். கடந்த பல வருடங்களாக இந்த அணிக்காக ஆடி வருகிறார். அவரது பந்து வீச்சில் பலமுறை சந்தேகம் ஏற்பட்டு பல முறை தனது பந்து வீசும் முறையை  மாற்றிக் கொண்டும் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவரது பந்துவீச்சில் மாற்றம் செய்துள்ளார் சுனில் நரேன். அதனையும் தாண்டி  மாற்றம் செய்த பந்து வீச்சை வைத்து கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

அதேபோல் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். அனைவரும் திணறி விடுவார்கள் என்று தெரிவித்து இருக்கிறார் கௌதம் காம்பீர்.இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இவர்தான்! கௌதம் கம்பீர் ஓபன் டாக்! 3

இதுகுறித்து “அவர் கூறுகையில் என்னை பொறுத்தவரையில் சுனில் நரேன் இந்த முறை மறைத்து வைத்து பந்தை வீச போகிறார் அப்படி பந்தை மறைத்துவைத்து வீசும்போது பேட்ஸ்மேன்களுக்கு மேலும் இது கஷ்டத்தை கொடுக்கும். அப்படி மறைத்து வைத்து வீசினால் பந்து உள்ளே வருகிறதா அல்லது வெளியே செல்கிறதா என்பதை பேட்ஸ்மேன்கள் கணிப்பது மிக மிகக் கடினம்.

அதேபோல் பந்து அவர் கையில் இருந்து மிகவும் தாமதமாகத்தான் வருவது போல் இருக்கும். இதனை வைத்து இந்த வருடம் மிகச் சிறப்பாக பந்து வீச போகிறார் சுனில் நரேன்” என்று தெரிவித்து இருக்கிறார் கௌதம் காம்பீர்.

கடந்த 2012 ல் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூழ்நிலையில் 110 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *