கிரிக்கெட் தான் எனது மொழி; இளம் வீரர் முஜிபுர் ரஹ்மான் சொல்கிறார் !! 1
கிரிக்கெட் தான் எனது மொழி; இளம் வீரர் முஜிபுர் ரஹ்மான் சொல்கிறார்

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், மொழி முக்கியமல்ல, கிரிக்கெட் தான் எனது மொழி என கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வளர்ந்து வருபவர் முஜீப் உர் ரஹ்மான். 17 வயதாகும் அவர் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் சிறப்பாக விளையாடினார்.

கிரிக்கெட் தான் எனது மொழி; இளம் வீரர் முஜிபுர் ரஹ்மான் சொல்கிறார் !! 2
“I used to bowl to my uncle from a very young age. And I bowled with a mindset that I was already playing at the international level. Right from the beginning, I got a chance to bowl to international players,” Mujeeb told TOI.

இந்நிலையில், தனது பந்து வீச்சு குறித்து முஜீப் உர் ரஹ்மான் மனம் திறந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் சிறு வயதில் என் மாமாவிற்கு பந்துவீசுவேன். அப்போதே சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறேன் என்று மனநிலையுடன் பந்து வீசுவேன். ஆரம்பத்தில் இருந்தே, சர்வதேச வீரர்களுக்கு பந்து வீச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் கிரிக்கெட் அறிவைப் பற்றிக் கூறுகிறேன்.

கிரிக்கெட் தான் எனது மொழி; இளம் வீரர் முஜிபுர் ரஹ்மான் சொல்கிறார் !! 3
Mujeeb, 17, is already creating ripples which can be attributed to the strong cricketing culture in the family.He had a fruitful IPL season with Kings XI Punjab, where he picked up 14 wickets from 11 matches

மொழி முக்கியமல்ல, கிரிக்கெட் தான் எனது மொழி. கிரிக்கெட் சம்பந்தமாக எனக்கு என்ன கூறப்படுகிறதோ, அது எனக்கு புரிகிறது. நான் கிரிக்கெட் விஷயங்களை புரிந்துகொள்கிறேன். அஜந்தா மெண்டிஸ், சுனில் நரைன், ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் பல்வேறு வகையான பந்துகள் வீசுவதை பார்த்துள்ளேன். அது என்னை கவர்ந்தது. நான் அந்த வீடியோக்களைப் பார்த்து, அதனுடன் வளர்ந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave a comment

Your email address will not be published.