மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் - புதிய கருத்தை தெரிவித்த ஐசிசி ! 1

மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் – புதிய கருத்தை தெரிவித்த ஐசிசி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நீண்ட காலம் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது இல்லை. 2008 ஆம் ஆண்டு மும்பை நகரில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு  தொடரில் பெரிதாக விளையாடுவதில்லை. கடைசியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன் பின்னர் இந்த இரண்டு அணிகளும் விளையாடினால் ஐசிசி தொடரில் தான் விளையாட வேண்டும்.

தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் ஆசிய கோப்பை தொடரிலும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் மட்டுமே இரு அணிகளும் விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த இரண்டு அணிகளும் விளையாடுவது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளை நடத்துவதற்கு புதிய முயற்சிகளை எடுத்து வந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக உங்களுடன் விளையாட முடியாது என்று அவ்வப்போது அறிவித்து வருகிறது.

மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் - புதிய கருத்தை தெரிவித்த ஐசிசி ! 2

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து பேசிய ஐசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில் இதற்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் விளையாடியதை போல தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பல்வேறு பிரச்சினைகள், அரசியல் காரணங்கள் காரணமாக அவை தொடராது என்பது நிதர்சனம். அவையெல்லாம் ஐசிசி கட்டுப்பாட்டில் இல்லை. எங்களால் என்ன செய்ய முடியும் என்றால் ஒரு நாட்டில் இன்னொரு நாடு வந்து விளையாடுவதற்கு ஆதரவு கொடுக்க முடியும் இதை மட்டுமே எங்களால் செய்ய முடியும்.

மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் - புதிய கருத்தை தெரிவித்த ஐசிசி ! 3

அதனை தாண்டி வேறு விஷயங்களை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அது எங்களது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று தெரிவித்திருக்கிறார் அந்த அதிகாரி. அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர்பாகவும் 2023-ஆம் வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *