இந்தியர்கள் போரை விரும்பவில்லை; சோயிப் அக்தர் ஓபன் டாக்
இந்தியர்கள் பாகிஸ்தானுடனான போர் வேண்டாமென்றே நினைக்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர்
பாகிஸ்தான் ரசிகர்களால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அன்போடு அழைக்கப்படுபவர் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டாலும், இப்போது தனக்கென ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து தன்னுடைய கருத்துகளை வீடியோவாக
வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனர்களின் உணவுப்பழக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இப்போது பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில் இந்தியா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஷோயப் அக்தர். அதில் “இந்தியா ஓர் அருமையான நாடு, அங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஆச்சரியப்படுத்துபவர்கள். அந்நாட்டு மக்கள் பாகிஸ்தானுடன் விரோதப்போக்கை ஒருபோதும் விரும்பாதவர்கள், மேலும் போரை வெறுப்பவர்கள்.
ஆனால், தொலைக்காட்சியை பார்க்கும்போது நாளையே போர் வந்துவிடும் போல எனக்கு தோன்றுகிறது. நான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்திருக்கிறேன், அந்நாட்டை உன்னிப்பாக கவனித்தும் வருகிறேன். இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறது.

இந்தியாவின் வளர்ச்சி பாகிஸ்தானை முன்னெடுத்தே நடக்கும், இதை நான் நம்புகிறேன்” என்றார்.
ஐபிஎல் குறித்து பேசிய ஷோயப் அக்தர், “ஐபிஎல் நிச்சயம் நடக்க வேண்டும். இந்தியாவுக்கு கொரோனாவால் எந்தவொரு நஷ்டமும் ஏற்படக்கூடாது. ஆனால், இப்போது நடப்பவையெல்லாம் எனக்கு கவலையே தருகிறது” என்றார்.