சூர்யகுமார் யாதவ் 

இலங்கையுடன் நடந்த மூன்றாவது டி20 போட்டியின் போது சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ரன்கள் கடந்திருக்கிறார் சூரியகுமார் யாதவ். இதன் மூலம் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார். அவற்றை ஒன்றன்பின் மற்றொன்றாக காண்போம்.

கடந்த 2021ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான சூரியகுமார் யாதவ், இதுவரை 45 டி20 போட்டிகளில் பங்கேற்று 43 இன்னிங்ஸ்களில் 1574 ரன்கள் அடித்துள்ளார். அதில் 13 அரை சதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும்.

இவர் 43 இன்னிங்சில் 1500 ரன்களை கடந்ததன் மூலமாக, டி20களில் அதிவேகமாக 1500 ரன்களை அடித்தவர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

"ஸ்கைக்கு இனி ஸ்கை தான் லிமிட்" விராட் கோலி, ரோகித் சர்மா சாதனைகளை அசால்ட்டாக காலி பண்ணிய சூரியகுமார் யாதவ்! 1

அதிவேகமாக 1500 ரன்கள் கடந்தவர்கள்:

பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் 39 இன்னிங்ஸ்களில் 1500 ரன்கள் கடந்திருக்கிறார். மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், 42 இன்னிங்ஸ்களில் கடந்திருக்கிறார். தற்போது சூரியகுமார் யாதவ் 43 இன்னிங்ஸ்களில் கடந்துள்ளார்.

சூரியகுமாரின் மற்ற டி20 சாதனைகள்:

அதேபோல் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் 1500 ரன்கள் கடந்த ஒரே வீரராகவும் சூரியகுமார் யாதவ் இருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சதங்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

சூரியகுமார் யாதவ்

அதிக டி20 சதங்கள்:

டி20 வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா நான்கு சர்வதேச டி20 சதங்களை அடித்திருக்கிறார். நியூசிலாந்து அணியைச் சேர்ந்த காலின் முன்ரோ 3 சதங்களை அடித்திருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் இதுவரை 43 டி20 இன்னிங்ஸ்கள் விளையாடி 1574 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 13 அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் அடங்கும். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 117 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஸ்ட்ரைக் ரேட்டில் டாப்:

டி20களில் சூரியகுமார் யாதவ்-இன் ஸ்ட்ரைக் ரேட் 190+ ஆகும். 1500 ரன்கள் கடந்த வீரர்கள் எவரும் இவ்வளவு அதிகமான ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருக்கவில்லை. இதிலும் சூரியகுமார் யாதவ் சாதனை படைத்திருக்கிறார்.

"ஸ்கைக்கு இனி ஸ்கை தான் லிமிட்" விராட் கோலி, ரோகித் சர்மா சாதனைகளை அசால்ட்டாக காலி பண்ணிய சூரியகுமார் யாதவ்! 2

டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம்

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய டி20 தொடருக்கு பிறகு ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியலில், சூரியகுமார் யாதவ் 883 புள்ளிகளுடன் தொடர்ந்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான், 836 புள்ளிகளுடம் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து வீரர் டெவான் கான்வெ 788 புள்ளிகளுடம் 3ம் இடத்தில் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *