Use your ← → (arrow) keys to browse
முகமது ஷமி;
இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. இவரின் வேகத்தால் பல முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2016 சொந்த நாட்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது, அப்போது அவரது மகள் மூச்சுத்திணறல் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
அந்நேரத்தில் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் தனது மகளை அன்று இரவு சென்று சந்தித்து விட்டு பின் மீண்டும் தனது அணிக்காக விளையாடுவதற்காக புறப்பட்டார்.
இரண்டாவது நாள் ஆட்டத் தொடரில் சமி 3 விக்கெட்டை எடுத்து தனது அணி வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களித்தார் .அப்போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.