சச்சின் டெண்டுல்கர்;
உலக கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1999 இல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விளையாடி கொண்டிருந்த போது, அவரது தந்தை மரணம் அடைந்தார் அச்செய்தி அவரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது உடனே தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
அப்போது இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு சச்சின் இல்லாதது ஒரு முக்கிய காரணமாகும்.

அங்கிருந்து உடனே கிளம்பிய சச்சின் டெண்டுல்கர் தனது அணிக்காக விளையாட தயாரானார். கென்யாவிற்கு எதிரான போட்டியில் 140 ரன்கள் அடித்து அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் சென்றார்.