சொந்த நாட்டில் மரியாதை கிடைக்காததால் வேறு நாட்டிற்காக விளையாடிய முக்கிய கிரிக்கெட் வீரர்கள் !! 1
Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

சொந்த நாட்டில் மரியாதை கிடைக்காததால் வேறு நாட்டிற்காக விளையாடிய முக்கிய கிரிக்கெட் வீரர்கள்

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குமே தங்களது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும். பணம் சம்பாதிப்பதையும் தாண்டி தனது நாட்டிற்காக விளையாடி வெற்றி பெற்று தனது நாட்டின் கொடியை கையில் ஏந்துவதையே ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் தங்களது வாழ்க்கை இலட்சியமாக வைத்திருப்பர்.

இத்தகைய ஆசையும், வேட்கையும் கிரிக்கெட் வீரர்களிடமும் உண்டு. ஆசையும் கனவும் இருந்தாலும் கிரிக்கெட் வாரியத்திற்குள் நடக்கும் அரசியலாலும், கால சூழ்நிலைகளாலும், குடும்ப சூழ்நிலைகளாலும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு விளையாட முடியாமல், வேறு வழியின்றி தனது திறமைக்கு வாய்ப்பு கொடுக்கும் நாட்டிற்காக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த வகையில், தங்களது சொந்த நாட்டு அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் வேறு நாடுகளுக்காக விளையாடி ஆறு முக்கிய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஜோனாதன் ட்ராட்

ஜோனதன் ட்ரொட் இவர் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.அங்கு உள்ள போர்டிஸ் என்னும் அணியில் u-15 மற்றும் u-19 ஆகிய தொடர்களில் பங்கேற்றார் பின்னர் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 2003 இல் இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார் .2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் விளையாடுவதற்கு பேட்டர்ன் ட்ரோட் தகுதி பெற்றார், அங்கு அவர் 2007 ஆம் ஆண்டில் T20I அறிமுகமானார்.

சொந்த நாட்டில் மரியாதை கிடைக்காததால் வேறு நாட்டிற்காக விளையாடிய முக்கிய கிரிக்கெட் வீரர்கள் !! 2

 

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அணியின் ஒரு மிகச்சிறந்த வீரராக பங்காற்றினார், 52 டெஸ்டில் 3835 ரன்கள் மற்றும் 68 ஒருநாள் 44.08 மற்றும் 51.25 ரன்கள் எடுத்தார். பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

Prev1 of 6
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *