இயான் மோர்கன்;
கிரிக்கெட் என்ற விளையாட்டை கண்டுபிடித்திருந்திருந்தாலும் ஒரு உலகக்கோப்பை என்பது இங்கிலாந்து அணிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இங்கிலாந்து அணியின் பல வருட கனவை நனவாக்கி கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இயான் மோர்கனே அயர்லாந்தை சேர்ந்தவர் தான்.
2007 உலகக் கோப்பை தகுதி தொடரில் மோர்கன் அயர்லாந்து அணிக்காக விளையாடினார், அவர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய பொழுதும் அவரால் அதற்கு மேல் அவரது அணியை கொண்டு செல்ல இயலவில்லை அதுவே அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
2009 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் 15 பேர் கொண்ட குழுவில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தால் அவர் அயர்லாந்து அணியில் இருந்து விலகினார்.
அன்றிலிருந்து அவர் இங்கிலாந்து அணிக்காக தன் கிரிக்கெட் பயணத்தை துவங்கினார். பின் அவரின் சிறப்பான விளையாட்டின் காரணமாக அவர் வெள்ளை பந்து தொடர்களில் நிரந்தரமாக விளையாட ஆரம்பித்தார்.
2015 உலக கோப்பை தொடரில் தோல்விக்குப் பிறகு இயான் மார்கன் கையில் இங்கிலாந்து அணி ஒப்படைக்கப்பட்டது,
அவரின் மிகச்சிறந்த செயல்பாட்டால் இங்கிலாந்து அணி வெற்றி மேல் வெற்றி பெற்றது மேலும் 2019 உலகக்கோப்பையும் கைப்பற்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக திகழ்ந்து வருகிறது.