சமீபகாலமாக ட்விட்டரில் விரேந்தர் சேவாக் கலக்கி வருகிறார்கள். ஒரே வார்த்தையில் அனைவரையும் கலாய்க்க கூடிய வல்லமை படைத்தவர். அதில் சிலர் மட்டுமே தப்பிப்பார்கள்.
சேவாக் பிறந்தநாளுக்கு ‘உல்டா’ ட்வீட் செய்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆங்கிலேயே நாட்டின் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன் ஆகியோர் மட்டுமே இதுவரை விரேந்தர் சேவாக்கை ஆச்சரிய படுத்தியுள்ளார்கள். அந்த பட்டியலில் சேவாக்கை திருப்பி கலாய்த்த ராஸ் டெய்லர் அடுத்ததாக வருகிறார்.
95 ரன்கள் குவித்த ராஸ் டெய்லரை சேவாக் டுவிட்டரில் தனது பாணியில் பாராட்டியுள்ளார். டெய்லர் என்பதை தமிழில் துணை தைப்பவர் என்று அழைப்பர். இந்தியில் தர்ஜி (Darji) என்றால் டெய்லர். கடந்த 18-ந்தேதியும், 19-ந்தேதியும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி டெய்லருக்கு அதிக வேலை இருக்கும். இதை வைத்து சேவாக் டுவிட் செய்துள்ளார். அதற்கு டெய்லர் ஹிந்தியில் பதில் டுவிட்டர் செய்து அசத்தியுள்ளார்.
சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சிறப்பாக விளையாடினீர்கள் தர்ஜி ஜி. தீபாவளி பண்டிகையின் ஆர்டர் நெருக்கடியை சமாளித்த பின்னர், சிறந்த முயற்சி’’ என்ற பதில் அளித்துள்ளார்.
இதற்கு டெய்லர் ‘‘நன்றி சேவாக் பாய். அடுத்த தீபாவளியின்போது சில நாட்களுக்கு முன்பே உங்களது துணியை கொடுங்கள்… ஹேப்பி தீபாவளி’’ என்று பதில் அளித்தார்.
அதற்கு சேவாக், ‘‘அடுத்த தீபாவளிக்கு எனது துணியை தைக்கும்போது ஒரு இஞ்ச் குறைவாக தைக்கவும். ராஸ் தி பாஸ். மோஸ்ட் ஸ்போர்ட்டிங்’’ என்று டுவிட் செய்தார்.
இதற்கு டெய்லர் ‘‘இந்த தீபாவளிக்கு உங்கள் டெய்லர் வேலையை சரியாக செய்யவில்லையா?’’ என்று பதில் அளித்தார்.
இதற்கு சேவாக், ‘‘உங்களுடைய உயர்தரமான வேலையை யாராலும் மேட்ச் செய்ய முடியாது. பார்ட்னர்ஷிப் அல்லது பேண்ட் ஆக இருந்தாலும்’’ என்று கூறியுள்ளார்.