ரொனால்டோ, மெஸ்ஸி இருவரில் இவ்ர் தான் பெஸ்ட்; விராட் கோஹ்லி ஓபன் டாக் !! 1

ரொனால்டோ, மெஸ்ஸி இருவரில் இவ்ர் தான் பெஸ்ட்; விராட் கோஹ்லி ஓபன் டாக்

கால்பந்து போட்டியில் இந்த தலைமுறை வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் யார் சிறந்த வீரர்கள்? என்ற விவாதத்திற்குள் சிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு கால்பந்து விளையாட்டு மீது அதிக பிரியம் உண்டு. இவரையும் இந்த விவாதம் விட்டு வைக்கவில்லை.

ரொனால்டோ, மெஸ்ஸி இருவரில் இவ்ர் தான் பெஸ்ட்; விராட் கோஹ்லி ஓபன் டாக் !! 2
India’s Virat Kohli during the ICC Cricket World Cup group stage match at Headingley, Leeds. (Photo by Nigel French/PA Images via Getty Images)

ரொனால்டோ சிறந்த வீரரா? மெஸ்சி சிறந்த வீரரா? என்பது குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். மெஸ்சி தனித்துவம் வாய்ந்த வீரர். முற்றிலும் இயற்கையாகவே கால்பந்து திறமை கொண்டவர். எந்தவொரு இடத்திலும் அவரது திறமைக்கு 2-வது இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

என்னைப் பொறுத்த வரையில் நிலைப்பாடு என்னவென்றால், திறமை அல்லது ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் முயற்சியை வெளிப்படுத்துவது சார்ந்ததுதான்.

ரொனால்டோ, மெஸ்ஸி இருவரில் இவ்ர் தான் பெஸ்ட்; விராட் கோஹ்லி ஓபன் டாக் !! 3

ரொனால்டோவின் இயக்கம் மற்ற எந்தவொரு வீரர்களிடமும் இருந்து அவரை பிரித்து காட்டுகிறது. டாப் லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொருவரும் திறமையானவர்கள்தான். ஆனால், ரொனால்டோவை போன்று ஒருவர் செய்வார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *