அந்த சம்பவத்தால் என் வாழ்க்கையே இழந்திருப்பேன் ; மனம் திறந்த சென்னை அணியின் இளம் பேட்ஸ்மேன் !! 1

தன் வாழ்க்கையில் நடைபெற்ற அந்த சம்பத்தால் என்னுடைய கிரிக்கெட் கரியரே காணாம போயிருக்கும் என்று சென்னை அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்புரன்சு சேனாபதி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணிகளுள் ஒன்றாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, நடப்பு தொடர் மிக மோசமானதாக அமைந்தது. கடந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை அசால்டாக தட்டி தூக்கியிருந்த சென்னை அணி, இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே மிக மோசமாக விளையாடியது.

தீபக் சாஹர், ஆடம் மில்னே போன்ற முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு காயம், கேப்டன்சியில் ஏற்பட்ட குழப்பம் போன்ற பின்னடைவுகளால், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற சென்னை அணி, 10 போட்டிகளில் படுதோல்வியடைந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

அந்த சம்பவத்தால் என் வாழ்க்கையே இழந்திருப்பேன் ; மனம் திறந்த சென்னை அணியின் இளம் பேட்ஸ்மேன் !! 2

அப்படியிருந்தும் சென்னை அணிக்கும் ஒரு சில நல்ல விஷயங்கள் நிகழ்ந்துள்ளது, குறிப்பாக இந்த ஐபிஎல் தொடர் மூலம் சென்னையில் இருக்கும் இளம் வீரர்களான முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், ஹங்கேர்கர் போன்றோரின் திறமை வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

 

அந்த வரிசையில் 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும், சுப்புரன்சு சேனாபதி என்ற வீரர் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார்.

 

ஒடிசா மாநிலத்தின் பேட்ஸ்மேனான இவர் 2022 ஐபிஎல் தொடரில் 50 லட்சம் ரூபாய் ஏலத்தில் சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இவருக்கு சென்னை அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் சேனாபதி தன்னுடைய கிரிக்கெட் கரியரில் ஏற்பட்ட மோசமான நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.அந்த சம்பவத்தால் என் வாழ்க்கையே இழந்திருப்பேன் ; மனம் திறந்த சென்னை அணியின் இளம் பேட்ஸ்மேன் !! 3

 

அதில் பேசிய அவர்,2014-2015 19 வயதிற்கு உட்பட்ட ஜோணல் போட்டிகளுக்கான பயிற்சி கேம்பில் விளையாடிக் கொண்டிருந்தேன், அப்பொழுது எனது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது அந்த காயத்தின் தன்மை அப்போது உணரவில்லை, பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று நினைத்தபோது என்னால் பயிற்சி செய்ய முடியவில்லை, அணியில் இருந்த பிசியோ எனக்கு உதவி செய்தார் அப்பொழுதும் அது சரியாகவில்லை, அது எலும்பு முறிவுதான் என்று புரிந்து கொண்டு, என்னுடைய ஏரியாவில் சிறந்த மருத்துவரிடம் அணுகினேன், அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் சரியாகும் என்று கூறினார். இதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டேன், அதனால் என்னால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது என்று சேனாபதி பேசியிருந்தார். மேலும் பேசிய அவர், ஜோணல் கேம்பில் இருந்தால் ஷூ மற்றும் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள்(kits) கிடைக்கும், ஆனால் நான் கேம்பில் இல்லை,இதனால் எனக்கு kits கிடைக்கவில்லை,ஆனால் கேம்பில் இருந்து எனக்கு ஷூ கொடுத்தார்கள்,அந்த நிமிடம் கை சரியான பின் சிறப்பாக விளையாட முடியும் என்று தோன்றியது,அந்த ஷு கிடைத்தது எனக்கு உந்து சக்தியாக இருந்தது, இதனால் மீண்டு வந்து கடுமையாக பயிற்சி செய்தேன் என்று சேனாபதி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published.