ஆஸ்திரேலியா செல்வதில் மைக்கேல் ஹசிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!மாலத்தீவு விடுத்துள்ள புதிய தடை காலம் 1

ஆஸ்திரேலியா செல்வதில் மைக்கேல் ஹசிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

ஐபிஎல் தொடர் பாதியில் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியில் வருன் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரனோ தொற்று ஒட்டிக் கொண்டது. அவர்களைத் தொடர்ந்து மற்ற மூன்று அணிகளிலும் வீரர்களுக்கு மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரனோ தோற்று ஒட்டிக் கொண்டது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடர் வீரர்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை அணியின் பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி மற்றும் மைக்கேல் ஹசி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து வந்தனர்.

IPL 2020 - Chennai Super Kings - Michael Hussey tests positive for Covid-19

மாலத்தீவு விடுத்துள்ள புதிய தடை காலம்

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஸ்திரேலியா செல்வது ஒரு சிக்கல் எழுந்தது. மே 15ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டது. எனவே அவர்கள் மாலத்தீவு சென்று அங்கே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு அங்கேயே இருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் தனது உடல்நிலை சரியான உடன் மைக்கேல் ஹசி இணைய திட்டமிட்டிருந்தார்.

தற்பொழுது புதிய சிக்கலாக இந்தியா நேபாளம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானம் மாலத்தீவுலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மைக்கேல் ஹசி மாலத்தீவு செல்ல முடியாமல் இங்கேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

IPL 2021: Michael Hussey Tests Positive For Covid-19 Again | India.com

மீண்டும் பாசிட்டிவ் என வந்த முடிவு

மைக்கேல் ஹசி தனியார் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு இறுதி பரிசோதனை செய்யும் போது கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

MS Dhoni gets over losses quickly, says Michael Hussey | Cricket News -  Times of India

இதனையடுத்து அவர் மாலத்தீவு சென்று ஆஸ்திரேலியா செல்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நேரடியாக ஆஸ்திரேலியா செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே மீண்டும் உடல்நிலை சரியான உடன் மைக்கேல் ஹசியை எப்படி ஆஸ்திரேலியாவுக்கு வழியனுப்பி வைக்க போகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் யோசித்து வருவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *