இந்தியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட சென்னை அணி அதிக ரசிகர்களை கொண்டு முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் கிரிக்கெட் மோகம் முற்றிலுமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 8.6 கோடி மக்களிடம் ஐபிஎல் ரசிகர்களிடம் ஆய்வு நடத்திய இந்த ஆய்வில் எந்த அணிக்காக சப்போர்ட் செய்கிறீர்கள் மற்றும் எத்தனை ஆண்டுகளாக என கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
அதே நேரம் உணர்வுப்பூர்வமாக சப்போர்ட் செய்வது, போட்டியை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பார்த்துக் கொண்டிருப்பது, அந்த அணிக்காக செய்த செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுமார் 2.86 கோடி மக்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2.41 கோடி மக்களும், அதற்கு அடுத்ததாக பெங்களூரு அணிக்கு 1.33 கோடி மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
சுமார் 75% பேர் இந்த மூன்று அணிகளையும் பின் தொடர்கின்றனர். மீதமிருக்கும் அணிகளுக்கு 25 சதவீத ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த ஆய்வு முடிவை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில்,
“ஆய்வின் முடிவில் சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மிகவும் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளாக இருக்கின்றன. அவர்கள் அதிகளவு லாபத்தையும், தங்களது பொருட்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றியை கண்டிருக்கின்றனர்.
வரும் காலங்களில் மற்ற அணிகள் இந்த இரண்டு அணிகளின் யுத்திகளை ஆராய்ந்து அவற்றை பின் தொடர வேண்டும். நிச்சயம் அதிக லாப நோக்கில் முன்னேறலாம்.” என்றார்.
இந்த ஆய்வின் முடிவில் மும்பை அணியை விட சென்னை அணிக்கு அதிக அளவில் உணர்வுபூர்வமாக ரசிகர்கள் இருக்கின்றனர். தொடரின் ஒரு அணியாக பார்க்காமல் அதில் உள்ள வீரர்களை தங்கள் வாழ்க்கையின் ஒருவராக பார்ப்பது தெளிவாக தெரிந்தது எனவும் அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் அந்த தாக்கம் சற்றும் இல்லாமல் ரசிகர்கள் சென்னை அணியை தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.