இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அறிமுகமாகி விளையாடிய ரவி அஸ்வின் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடைக்காலத் தடை விதிக்கும்வரை சென்னை அணியில் தான் விளையாடி வந்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணி இல்லாத நிலையில் அஸ்வின் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் விளையாடி வந்தார், 2018ஆம் ஆண்டு சென்னை அணி கம்பேக் கொடுத்த பொழுது ரவி அஸ்வினை மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியால் அஸ்வினை தனது அணியில் இணைக்க முடியவில்லை. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி தமிழக வீரர் அஸ்வினை தனது அணியில் இணைத்துக் கொண்டது.
பின் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதிலும் டெல்லி அணி இவரை தக்கவைக்க வில்லை. இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் அஸ்வினை எந்த அணி தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஸ்வின் சென்னை அணி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், ஐபிஎல் தொடரில் எனது மனதுக்கு பிடித்தமான அணி என்றால் அது சென்னை அணிதான், சென்னை அணி என்பது எனக்கு பள்ளிக்கூடம் போன்றது,அங்குதான் நான் முதன் முதலில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ப்ரீகேஜி,எல்கேஜி,யுகேஜி போன்ற மழலை பள்ளியை முடித்தேன், பின் பத்தாம் வகுப்பும் அதற்குப்பின் 11 மற்றும் 12 ஆகிய உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடித்தேன், மேலும் அங்குதான் கல்லூரி வகுப்பையும் கடந்த சில வருடங்களுக்கு முன் முடித்தேன். தற்பொழுது மீண்டும் எனது சொந்த அணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஏலத்தில் தான் எந்த அணியில் விளையாடப் போகிறோம் என்று முடிவாகும் இப்படி சென்னை அணி குறித்து ரவி அஸ்வின் உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.