புதிய செயலியை அறிமுகப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
புதிய செயலியை அறிமுகப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Battle Of Chepauk 2 என்ற பெயரில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் துவக்கத்தில் இருந்தே தனக்கென பெரும் ரசிகர் படையை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

புதிய செயலியை அறிமுகப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இரண்டு ஆண்டு தடை காலம் முடிந்து இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டி புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆப் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பேட்டிள் ஆப் சேப்பாக் 2 (Battle Of Chepauk 2) என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் மூலம் ரசிகர்கள் செல்போனில் சென்னை அணிக்காக கிரிக்கெட் விளையாடலாம். அந்த ஆப்பில் சூப்பர் ஓவர், மல்டி பிளேயர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

முன்னதாக வெளியிடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே ஆப்) என்ற ஆப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இந்த ஆப்பிற்கும் கிடைத்துள்ளது.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு நடைபெறும் போட்டியில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு நடைபெறும் போட்டியில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *