விலகும் அதிரடி ஆட்டக்காரர்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த அடுத்த பிரச்சனை !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரரான டெவன் கான்வே அடுத்த ஓரிரு போட்டிகளுக்கான சென்னை அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

விலகும் அதிரடி ஆட்டக்காரர்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த அடுத்த பிரச்சனை !! 2

நடப்பு தொடரை படுதோல்வியுடன் துவங்கிய சென்னை அணி, தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்தது. சென்னை அணிக்கா இந்த நிலைமை என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், வழக்கம் போல் பெங்களூர் அணி, சென்னை அணிக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியுடனான அடுத்த போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு தீபக் சாஹர் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், தற்போது சென்னை அணியில் இருந்து மற்றொரு வீரரும் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலகும் அதிரடி ஆட்டக்காரர்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த அடுத்த பிரச்சனை !! 3

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன நியூசிலாந்து அணியின் டெவன் கான்வேவிற்கு, இந்த தொடரில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் சொதப்பியதால் அவரை அணியில் இருந்து நீக்கிய சென்னை அணி, ராபின் உத்தப்பாவை துவக்க வீரராக களமிறக்கி வருகிறது. டெவன் கான்வேவிற்கு ஓரிரு வாய்ப்பு கொடுக்கலாம் என ரசிகர்களே சமூக வலைதளங்கள் மூலம் சென்னை அணியிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில், டெவன் கான்வே ஓரிரு போட்டிகளில் இருந்து விலகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெவன் கான்வேவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ‘Pre Wedding’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தோனி உள்பட சென்னை அணியின் அனைத்து வீரர்களும் வேஷ்ட சட்டையுடன் கலந்து கொண்டனர்.

விலகும் அதிரடி ஆட்டக்காரர்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த அடுத்த பிரச்சனை !! 4

இந்தநிலையில், டெவன் கான்வேவிற்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதால், அவர் நியூசிலாந்து செல்ல உள்ளதாகவும், இதனால் டெவன் கான்வே அடுத்த ஓரிரு போட்டிகளுக்கான சென்னை அணியில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்திற்கு பிறகு கான்வே சென்னை அணியில் இருந்து இணைந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதற்குள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டுவிட்டால் அது நிச்சயமாக சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெறும் (21-4-22) தனது 7வது போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *