தோனியை கழற்றி விடுங்கள்! உங்களுக்கு 15 கோடி லாபம்! வெறுப்பை சம்பாதிக்கும் ஆகாஷ் சோப்ரா! 1

தோனியை கழற்றி விடுங்கள்! உங்களுக்கு 15 கோடி லாபம்! வெறுப்பை சம்பாதிக்கும் ஆகாஷ் சோப்ரா!

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 17 வருடங்கள் விளையாடிவிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடும் அவரது தனிப்பட்ட செயல்பாடு மிகச் சிறப்பாக இல்லை எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் போதெல்லாம் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அல்லது இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுவிடுவார்.

தோனியை கழற்றி விடுங்கள்! உங்களுக்கு 15 கோடி லாபம்! வெறுப்பை சம்பாதிக்கும் ஆகாஷ் சோப்ரா! 2

இந்த வருடம் எதுவுமே நடக்கவில்லை. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 200 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். மேலும், இந்த வருட ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியின் போது அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் அணியை நாங்கள் தயார் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்த வருடம் மிகப் பெரிய ஏலம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வைத்திருக்கக்கூடாது.

அவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் அந்த அணிக்கு 15 கோடி லாபம் கிடைக்கும் என்று பேசி அவரது ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் அவர் பேசுகையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் சென்னை அணியில் தோனி வைத்திருக்கக் கூடாது. அப்படியே வைத்திருந்தால் அதற்கு அடுத்த மூன்று தொடர்களிலும் தோனி விளையாடுவாரா என்பது சந்தேகம் தான்.

தோனியை கழற்றி விடுங்கள்! உங்களுக்கு 15 கோடி லாபம்! வெறுப்பை சம்பாதிக்கும் ஆகாஷ் சோப்ரா! 3

2021ஆம் ஆண்டு அவர் விளையாடுவதை உறுதி என்றாலும் அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுவது சந்தேகம் தான். இதன் காரணமாக சென்னை அணியை 15 கோடிகளை இழக்க நேரிடும் என்று பேஸ்புக் லைவ் வீடியோவில் தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

இப்படி இஷ்டத்திற்கு பேசி வரும் இவர் தான் தோனி நன்றாக ஆடும் போதெல்லாம் கைகொட்டிச் சிரித்து அவரை வாய்நிறைய பாராட்டி புகழ்ந்தார். எப்படிப்பார்த்தாலும் தோனி அடுத்த வருடம் ஆடுவார் . அதற்கு அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘காட்பாதர்’ ஆக மாறி விடுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்குள்ளாக ஆகாஷ் சோப்ரா போன்றவர்கள் மூக்கை நுழைத்து இஷ்டத்திற்கு பேசி வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *