இந்த டீம வச்சிக்கிட்டு ப்ளே ஆஃப் வந்ததே பெரிய விசயம்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசிய முன்னாள் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டி வரை தகுதி பெற்றது சாதரண விசயம் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும், இறுதி போட்டி 29ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது. 28ம் தேதி நடைபெற வேண்டிய போட்டியானது மழை காரணமாக 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இறுதி போட்டி குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருவதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு ஒரே காரணம் தோனி தான் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதே பெரிய ஆச்சரியம் தான். பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணி, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்ததற்கு ஒரே காரணம் தோனி மட்டுமே. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், சென்னை ஆடுகளத்தை தவிர மற்ற ஆடுகளங்களில் பந்துவீச்சில் திணறி வந்தனர், ஆனால் சென்னை அணியில் நிலவி வந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து சென்னை அணியை, தோனி இறுதி போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இது தோனியின் மேஜிக் தான்” என்று தெரிவித்தார்.