ஓய்வு பெறுகிறாரா தல தோனி..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 1

ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது ஓய்வை அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியே அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக திகழ்ந்து வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட தொடரில் மிக மோசமாக விளையாடியது.

இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 6 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, நடப்பு ஐபிஎல் தொடருக்கான ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

ஓய்வு பெறுகிறாரா தல தோனி..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலரும் சென்னை அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று சென்னை அணியின் கேப்டனான தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனால் தோனி அடுத்த தொடரில் விளையாடுவாரா இல்லை திடீரென ஓய்வை அறிவித்துவிட்டு ஒதுங்கி கொள்வாரா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து வந்த நிலையில், தோனி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஓய்வு பெறுகிறாரா தல தோனி..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 3

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கான டாஸின் போது, வர்ணனையாளர் டேனி மோரிஸ்சன் சிஎஸ்கே-வுக்கான கடைசி போட்டியாக இது இருக்குமா? என்று தோனியை பார்த்து கேட்டார்.

அதற்கு எம்எஸ் தோனி நிச்சயமாக இல்லை! (Definitely Not!) எனப் பதில் அளித்தார். இதில் இருந்து எம்எஸ் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

ஓய்வு பெறுகிறாரா தல தோனி..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !! 4

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் டோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்பதை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *