ருத்துராஜ் கெய்க்வாட், பிராவோவிற்கு இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிககான சென்னை அணி இது தான் !! 1

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் வரலாறு காணாத தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டியிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 15 வருட ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முறை, தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து இல்லை, ஆனால் இந்த முறை சென்னை அணி தொடர்ச்சியாக நான்கு போட்டியிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட், பிராவோவிற்கு இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிககான சென்னை அணி இது தான் !! 2

 

தொடர்ச்சியாக நான்கு படுதோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது 5வது போட்டியில் டூபிளசிஸ் தலைமயிலான பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த போட்டி இன்று (12-4-22) இரவு நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் உத்தப்பா ஆகியோர் சொதப்பினாலும் அவர்களுக்கான வாய்ப்பு இந்த போட்டியிலும் மறுக்கப்படாது என தெரிகிறது. உத்தப்பா மற்றும் கெய்க்வாட்டே இந்த போட்டியிலும் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள்.

ருத்துராஜ் கெய்க்வாட், பிராவோவிற்கு இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிககான சென்னை அணி இது தான் !! 3

மிடில் ஆர்டரிலும் வழக்கம் போல் மொய்ன் அலி, சிவம் துபே மற்றும் அம்பத்தி ராயூடு ஆகியோருக்கே இடம் கிடைக்கும். பந்துவீச்சாளர்கள் வரிசையில் மட்டும் சென்னை அணி நிச்சயம் மாற்றத்துடன் தான் களமிறங்கும் என தெரிகிறது. பிராவோ கடந்த மூன்று போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாவிட்டாலும் அவருக்கான வாய்ப்பு இந்த போட்டியிலும் மறுக்கப்பட வாய்ப்பில்லை, சென்னை அணி அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கூடுதலான வாய்ப்புகள் கொடுக்கும் என்றே தெரிகிறது. இதனால் டூவைன் ப்ரெடோரியஸிற்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

ருத்துராஜ் கெய்க்வாட், பிராவோவிற்கு இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிககான சென்னை அணி இது தான் !! 4

தீபக் சாஹரின் இடத்தில் களமிறக்கப்பட்ட துசார் தேஸ்பாண்டே மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவதால், இன்றைய போட்டியில் ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது. அதே போல் கிரிஸ் ஜோர்டன் மற்றும் மகேஷ் தீக்‌ஷன்னா ஆகியோருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.

பெங்களூர் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, சிவம் துபே, அம்பத்தி ராயூடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, ராஜவர்தன் ஹங்ரேக்கர், கிரிஸ் ஜோர்டன், மகேஷ் தீக்‌ஷன்னா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *